தெய்வ நம்பிக்கை என்பது ஒருபுறம் இருந்தால்கூட உங்களிடத்தே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைப்பது அரிது. - விவேகானந்தர்....... ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தம்மை மாற்றி கொள்ள நினைப்பதில்லை- லியோ டால்ஸ்டாய்.

Sunday, 29 January 2012

0 ஞாபக சக்தி அதிகரிக்க - பாட்டி வைத்தியம்

நமக்கும் சரி பிள்ளைகளுக்கு சரி ஞாபக சக்தி குறையும் போது பல பிரசனைகளை எதிர்  நோக்குகின்றோம். பாட்டி வைத்தியம் இதற்க்கான தீர்வை உங்களுக்கு தருகிறது.கீழ் தரப்பட்ட ஒரு செய் முறையை பின்பற்றுங்கள்.

1.ஞாபக சக்தி அதிகரிக்க





தேவையானப் பொருட்கள்:
  1. செம்பருத்திப்பூ.
செய்முறை:
செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தகாம்பை நீக்கிவிட்டு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மூளைக்கு பலம் கூடும்.
2.ஞாபக சக்தி அதிகரிக்க
தேவையான பொருட்கள்:
  1. சீரகம்.
  2. தும்பைச் சாறு.
  3. முசுமுசுக்கைச் சாறு.
  4. வல்லாரைச் சாறு.
செய்முறை:
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்து கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
3ஞாபக சக்தி அதிகரிக்க
தேவையான பொருட்கள்:
  1. வெந்தயம்.
  2. கொண்டைக்கடலை.
  3. சர்க்கரை.
செய்முறை:
4 வெந்தயம், 15 கொண்டைக்கடலை இவற்றை இரவு ஊற வைத்து காலையில் மசித்து சர்க்கரை போட்டு தினமும் சாப்பிட ஞாபக மறதி குறையும்.
4.ஞாபக சக்தி அதிகரிக்க (அதிக மறதி.)

தேவையான பொருட்கள்:
  1. முளைக்கீரை.
  2. வல்லாரை .
  3. பருப்பு.
செய்முறை :
முளைக்கீரை, வல்லாரை  கீரை  சேர்த்து   பருப்புடன் சமைத்து உண்ண  நினைவாற்றல்  அதிகரிக்கும்.
5.ஞாபக சக்தி அதிகரிக்க 

தேவையான பொருட்கள் :
  1. சிறுகீரை.
  2. மிளகு.
  3. உப்பு.
  4. நெய்.
செய்முறை :
சிறுகீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில் போட்டுஅடிக்கடிசாப்பிட  நினைவாற்றல் அதிகரிக்கும்.
6.ஞாபக சக்தி அதிகரிக்க 

தேவையான பொருட்கள் :
  1. ஆரைக்கீரை.
செய்முறை :
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டால், நினைவாற்றல் பெருகும்.
7.ஞாபக சக்தி அதிகரிக்க (அதிக மறதி.)
தேவையானப் பொருட்கள்:
  1. வல்லாரை இலை.
  2. சீரகம்.
  3. மஞ்சள்.
செய்முறை:
வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு பின்பு இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, 




/>

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More